Pages

Thursday, May 9, 2013

ஒரே நேர‌த்‌தி‌ல் ஏழு பட‌ங்க‌ள் - அச‌த்து‌ம் ‌விஜ‌ய் சேதுப‌தி


முதலில் விஜய் சேதுபதி என்னென்ன படங்களில் நடிக்கிறார் என பார்த்துவிடுவது நலம்.

ரம்மி, பத்மினியும் பண்ணையாரும், சங்குத்தேவன், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விமலுடன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாதப் படம்.

இவற்றை முடிக்க இன்னும் ஒன்றரை வருடம் ஆகலாம். ஆனாலும் நல்ல பட வாய்ப்பை உதறுவது புத்திசாலித்தனம் இல்லையே.

விஜய் சேதுபதியின் நண்பர் ஆனந்த் குமார் சொன்ன கதை விஜய் சேதுபதியை அசத்திவிட்டது. உடனே மேலும் கீழும் பார்க்காமல் கால்ஷீட் தந்திருக்கிறார். படத்தின் பெயர் வசந்த குமாரன். சூது கவ்வும் படத்தயாரிப்பில் இணைந்து கொண்ட ஸ்டுடியோ 9 இந்தப் படத்தை தயாரிக்கிறது. இசை... வேறு யாராக இருக்கும், சந்தோஷ் நாராயணன்தான்.

இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் ஏழு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஒரே ஹீரோ விஜய் சேதுபதிதான்.