Pages

Wednesday, May 15, 2013

அமெரிக்காவையும் சூது கவ்வியது!



இந்தியாவில் வெளியாகி ஒரு வாரம் சென்றபிறகு அமெரிக்க திரயரங்குகளில் வெளியான விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
நளன் குமாரசாமி மற்றும் அவரது டீம் வழங்கிய இந்த புதிய ரக காமெடி திரில்லர் சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவையும் கலக்கி வருகிறது சூது கவ்வும்.

சீரிய விமர்சகர்களும் சினிமா விரும்பிகளும் இந்தப்படத்தை பெரிதும் விரும்ப அது ஒரு சூப்பர் ஹிட் படமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைக் காண அமெரிக்காவிலும் ஆசை முண்டுவதால் பிரைம் மீடியா 7 இடங்களில் திரையிட்டதை தற்போது 15 இடங்களாக அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து தரப்பினரும் காண வசதியாக சப் டைட்டில்களும் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

துவக்கத்தில் சான் ஜோஸ், எடிசன், சிகாகோ, சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், மின்னியாபோலீஸ், டலாஸ், மற்றும் கொலம்பஸ் ஆகிய இடங்களுடன் தற்போது கூடுதலாக, அட்லாண்டா, சார்லட், டெட்ராய்ட், சான் ஆடனியோ, டாம்பா, பாஸ்டன், கனெக்டிகட் ஆகிய இடங்களிலும் திரையிடப்பட்டுள்ளது.