Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்


பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் காலமானார். அவருக்கு வயது 59.

மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் மணிவன்னன். இவர் 400க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நன்பர் ஆவார், நடிகர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,