Sunday, September 7, 2014

ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்



நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா.

ஆம் நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுத்துவிடும்.

சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும், உடனே மருத்துவரை அணுகுவதுடன் இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை மற்றும் உணவுகளை உட்கொள்வது நலம்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது.

நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் `சயனோஸிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம்.

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும்.

சருமத்தைப் போல சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.

நகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.

* இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், சமையல் அறை, பசை மற்றும் இரசாயனங்களை உபயோகப்படுத்தும் போது கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

நகங்கள் ஏன் வளர்கிறது?

நகங்கள் தேவையில்லாமல் வளர்கிறது என்று நினைக்க வேண்டாம், இது ஒரு கழிவுப் பொருள் தான்.

கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது, நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.

அதேபோன்று நகத்தின் உட்புற பாகங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

Monday, July 21, 2014

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்



உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.

எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இங்கு முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நன்மைகளைப் படித்து, இன்றிலிருந்து தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.
முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

கண் ஆரோக்கியம்

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

நிச்சயம் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டையை சாப்பிட்டால், பாலுணர்ச்சியனது அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு

பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
இன்றிலிருந்து தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

Sunday, June 8, 2014

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது

Photo: வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.

கருப்பட்டியில் உள்ள மருத்துவ குணங்கள்




பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

• கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

• கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.

• கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

• குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

• சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.

அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

Tuesday, April 29, 2014

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா


கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிக்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.

கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்

மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனித்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.

ரத்தச்சோகை மாறும்: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் ரத்தச்சோகை உண்டாகிறது. இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் ரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்கும்: அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.

Monday, March 3, 2014

ஆரோக்கியம் நிறைந்த திராட்சை


குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.

கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.

மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

Thursday, February 27, 2014

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்



முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.

17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.

முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.100 கிராம் கீரையில்...41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம் விட்டமின் சி ((ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.

Sunday, February 23, 2014

உடல் எடையை குறைக்க பேரிக்காய் சாப்பிடுங்கள்



பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றன. இதில் காணப்படும் எளிதில் கரையாத பாலிசாக்ரைடு மூலக்கூறுகள் குடலில் சேரும் புற்று நோய் நச்சுகளை அகற்றவல்லது.

உடலிற்கு வலிமையளிக்கக் கூடிய நார்சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.1 கிராம் நார்ப் பொருட்கள் காணப்படுகின்றன.

குறைந்த ஆற்றல் அளிக்கக் கூடியவை பேரிக்காய்கள். 100 கிராம் பழத்துண்டில் 58 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை, கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதிக அளவிலான வைட்டமின் சி சத்துப்பொருட்கள் பேரிக்காயில் நிறைந்து உள்ளன. புதிதாக பறித்த 100 கிராம் பழத்தில் 7 சதவீதத்திற்கு வைட்டமின் சி காணப்படுகிறது.

பேரிக்காயில் பீட்டா கரோட்டீன், லுட்டின் மற்றும் ஸிசான்தின் போன்ற சத்துப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை உடலுக்கு வலிமை அளிப்பதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகின்றன.

தாமிரம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாது உப்புகள் பேரிக்காயில் கணிசமாக உள்ளன. இவை தவிர பி குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் போலேட் போன்றவையும் மிகுதியாக காணப்படுகின்றன.

பேரிக்காய் பழங்கள் உடலுக்கு ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற உபாதைகளை ஏற்படுத்துவதில்லை.

Sunday, September 22, 2013

கம்ப்யூட்டர் வேலையா?: உங்கள் கண்கள் பத்திரம்


இந்த உலகைப் பார்க்க உதவும் கண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு வகைகள்



உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.

Saturday, July 20, 2013

முகப்பருவை தவிர்க்க 10 வழிகள்!


முகப்பருக்கள் எதனால் வருகிறது?

தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும்.

Saturday, June 29, 2013

அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?


அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜி பிரச்சினையே இல்லை. பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

Monday, June 17, 2013

இஞ்சியின் மருத்துவ பயன்


இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம். 

Wednesday, June 12, 2013

கண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை


வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும்.

Saturday, June 8, 2013

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும்.

அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!

அல்சர்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய்

மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.

இரத்த சோகை 

பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய் 

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

 உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொலஸ்ட்ரால்

 நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை 

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

 பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி 

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு 

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண் 

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு 

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

Friday, May 31, 2013

எப்போதும் இளமையாக இருக்க


முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட், அக்ரூட் போன்றவற்றை தினம்
ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு சருமத்துக்கு மிகவும் நல்லது.

Thursday, May 2, 2013

ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனை பாதிக்கும்


ஓய்வு எடுக்கிறேன் என்ற பெயரில் சிலர் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். வேறு சிலர் தொலைக்காட்சி, கணணி முன்பு மூழ்கி கிடப்பார்கள்.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி


வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால்