Friday, May 31, 2013

எப்போதும் இளமையாக இருக்க


முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட், அக்ரூட் போன்றவற்றை தினம்
ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு சருமத்துக்கு மிகவும் நல்லது.

அவை பிடிக்காது. விலையும் அதிகம்என்று நினைப்பவர்கள்
மலிவான விலையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை இந்த சீசனின் நிறைய சாப்பிடலாம். நீர் சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தை மென்மையாகவும், மினுமினுப்பாகவும் வைத்துக்கொள் உதவும். உடல் முதுமை அடைவதை தடுக்கும் உணவு வகைகளில்
வெண்ணெய்க்கு முக்கிய பங்கு உள்ளது.சோர்வை போக்கி,
தோல் வறண்டு போவதை தடுத்து, சருமத்தை அழகாக
வைத்திருக்கும். சோற்று கற்றாழை ஜூஸை தினமு பருகினால்
இளமைக்கு நூறு சதவீதம் கியாரண்டி என்கிறார்கள்ஆரா­ய்ச்சியாளர்கள். 

இதில் வைட்டமின் ஈ,சி மற்றும் கொழுப்புஅமிலங்கள் உள்ளது. உடல் பருமனை தடுக்கும் விதமாக கொழுப்பை கரைத்து, இருதயத்தையும் பாதுகாக்கும். கிரீன் டீயின் நன்மைகள் ஏராளம். இதிலுள்ள ஆண்டியாக்ஸிடண்ட உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இளமைப்
பொலிவைத் தக்க வைக்க உதவும்.இவற்றுடன் தினமும் குறைந்தது 2
முதல் 3 லிட்டர் தண்ணீர்குடிப்பது சருமத்துக்கு மிகவும் அது தோல் வறண்டு போகாமல் தடுக்கும்.