
ஓய்வு எடுக்கிறேன் என்ற பெயரில் சிலர் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். வேறு சிலர் தொலைக்காட்சி, கணணி முன்பு மூழ்கி கிடப்பார்கள்.
இது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும், நீரழிவு, இருதய நோய்களை வரவழைக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வில்லியம்சன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், சாதாரணமாக மக்கள் தொலைக்காட்சிகள் முன்பு 4 மணி நேரம் வரையில் செலவிடுகிறார்கள். ஒரு நாளில் பகல் நேரத்தில் 60 சதவீதத்தை உட்கார்ந்து இருப்பதிலேயே கடத்துகிறார்கள்.
இதனால் உடலில் சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு அதிகரிக்கிறது. ஆகவே இந்த பழக்கத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். 20 நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு நிமிடமாவது நடப்பது அவசியம்.