Saturday, January 12, 2013

காலி ப்ளவர் 65




தேவையான பொருட்கள்
காலி ப்ளவர் - 1 பூ (பெரியது)
கடலை மாவு- 1 1/2 ஸ்பூன்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
சோள மாவு -1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 3 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -பொறிக்க
அரைக்க
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - சிறிதளவு
பட்டை,கிராம்பு - தலா 1

செய்முறை
முதலில் பூவை உதிர்த்து மிதமான சூடு தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.பின் அலசினால் பூவில் உள்ள புழுக்கள் போய்விடும்.அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து அவைகளை காலிப்ளவருடன் சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடம் ஊறவிடவும்.பின் அதனுடன் சோளமாவு,கடலை மாவு,அரிசிமாவு,உப்பு,கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.இதை பஜ்ஜி மாவு பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் படி பிசைந்து கொள்ளவும். பின் இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்து பரிமாற வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருக்கும்.