Thursday, July 4, 2013

சிங்கம் 2 பிரம்மாண்ட வெளியீடு! பதட்டத்தில் சூர்யா!


தமிழகத்தின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் பிரம்மாண்டமாய் நின்றுகொண்டிருப்பது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் சிங்கம் 2 திரைப்படத்தின் போஸ்டர்கள் தான்.

சிங்கம் 2 திரைப்பட டிரெய்லரின் வசங்களையெல்லாம் கண்ணமூடி ஒப்புவிக்கும் அளவிற்கு ரசிகர்களை மாற்றிவிட்டன தொலைக்காட்சிகளில் செய்யப்படும் விளம்பரங்கள்.

’பாஞ்சி அடிச்சா பத்தறை டன் வைட்டுடா’ என சூடாக போட்டுக்காட்டப்பட்ட திரைப்படத்திற்கு ‘U’ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர் தணிக்கை குழுவினர். சமீபத்தில் முழுப்படத்தையும் பார்த்த சூர்யாவும் “எனக்கு படம் புடிச்சிருக்கு.

சிங்கம் படத்தைவிட பிரம்மாதமா வந்திருக்கு” என்று தான் நடித்த படத்தின் மீது நம்பிக்கையுடன் இருந்தாலும், படம் பிடிக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயத்தால் பதட்டத்துடன் காத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு(யமுடு -2) மொழிகளிலும் உலகம் முழுவதும் 2000 ஸ்கிரீன்களில் பிரம்மாண்டமாக வெளியாகிறதாம் சிங்கம் 2.