Thursday, February 7, 2013

கொஞ்சம் சோறு.. கொஞ்சம் வரலாறு..!!!


இன்றைய தலைமுறை யுவன்/யுவதிகளுக்கு FAST FOOD கலாசாரம் தொற்றி கொண்டு விட்டது.

தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.


தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை என் அனுபத்தில் எழுதி இருக்கிறான்.

இனிப்பு வகைகள்..............

ஆம்பூர் மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.

காரைக்கால் குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு

கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைபாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு

சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு

திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வடஇந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.

தூத்துக்குடி மக்ரூன் தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

பாலவாநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம்,நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பதுதான் கோவா.

அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி

ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி

கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு

காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி

மரபு சார்ந்த சமையல் வகைகள்...............

அய்யங்கார் சமையல்
ஆந்திரா சமையல்
இஸ்லாமிய சமையல்
உடுப்பி சமையல்
கொங்கு சமையல்
செட்டிநாடு சமையல்
சேலம் சமையல்
தஞ்சாவூர் சமையல்
மதுரை சமையல்
மலபார் சமையல்
விருதுநகர் சமையல்

சாப்பாடு..............

ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
காரைக்குடி உப்புக்கண்டம் : உணவு ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
இராமேஸ்வரம் மாசிக்கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
பரமத்தி வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
மதுரை இட்லி : சைவ சிற்றுண்டி
விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு

மேலை குறிப்பிட்டவை சில...... இன்னும் தெரிந்த ஊர்களின் தெரியாத உணவு வகைகள் நிறைய இருக்கின்றது..!!

தொகுப்பு : ரமேஷ் துரைசாமி..!!