Friday, March 8, 2013

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 561 மில்லியன் யூரோ டாலர் அபராதம்



அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், தங்களுடைய தயாரிப்பான கம்ப்யூட்டர் மென்பொருள் பழுதடைந்தால், அதை பயன்படுத்துபவர்கள், அவர்களுக்கு விருப்பமான
மென்பொருளை உபயோகப்படுத்தி இன்டர்நெட் பயன்பாட்டைப் பெறலாம் என்று அறிவித்திருந்தது.

ஆனால், அந்தக் கம்பெனி அறிவித்தது போன்று செய்யவில்லை என்றும், அதனால் 2011 மே மாதம் முதல் 2012 ஜூலை முடிய இன்டர்நெட் உபயோகித்த 15 மில்லியன் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் என்றும் புலனாய்வுத்துறை கண்டறிந்தது.

இது வாடிக்கையாளர்களுக்கு இழைத்த நம்பிக்கைத்துரோகம் என்று கருதிய புலனாய்வுத்துறை, முதன்முதலாக இத்தவறினைப் புரிந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 561 மில்லியன் யூரோ டாலர் அபராதம் விதித்துள்ளது.

இந்த அபராதத் தொகை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நடப்பு வருடத்தின் காலாண்டு லாபக் கணக்கீட்டில் 11 சதவிகிதமாகவும், வருட விற்பனையில் 1 சதவிகிதமாகவும் ஆகவும் இருக்கும். என்றாலும் இதன் விளைவாக அதன் பங்குகளின் மதிப்பு 28.09 டாலரில் இருந்து 09 சதவிகிதம் குறைந்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பக் குறைபாடே காரணம் என்று அந்த நிறுவனம் கூறினாலும் இத்தவறுக்கு முழுப் பொறுப்பேற்றுள்ளது. இந்த நடவடிக்கை மற்ற வணிக நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று அந்த புலனாய்வுத்துறை கருதுகிறது.