Thursday, July 4, 2013

இனி சிம் கார்டு வாங்க கைரேகை அவசியம்


போலி சான்றிதழ்கள் கொடுத்து சிம் கார்டுகள் வாங்குவதைக் கட்டுப்படுத்த புதிய சிம் கார்டுகள் வாங்கும்போது கைரேகை பதிவுகளை கட்டாயமாக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வந்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளின் கையில் போலியான நபர்களின் பெயரில் சிம் கார்டுகள் கிடைப்பதை தவிர்க்க புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. அதன்படி முகவரி மற்றும் அடையாள சான்று இல்லாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்ய செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.