Tuesday, September 24, 2013

பெட்ரோலை அதிகம் பயன்படுத்துவது யார்?

பெட்ரோலுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய பெட்ரோலிய துறை, அது பணக்காரர்களுக்கான எரிபொருள் என்று கூறிவந்தது. இந்த நிலையில் நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கே செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்காக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், "தற்போது பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் போன்ற இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள்.

எனவே நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கார்களுக்கு 27 சதவீதம் பெட்ரோல் பயன்படுகிறது. ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கு 6 சதவீதம் பெட்ரோலும், 2 சதவீதம் இதர உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.