Monday, September 8, 2014

ஹெல்மெட் அணிவதும் உயிருக்கு ஆபத்தான ஒன்று


மனித உடலின் மொத்த உயிர்நாடியாக விளங்குவது மூளை மட்டுமே, இது பாதிப்படைந்தால் இறப்பு நிச்சயம் தான்.

இதற்காகவே வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் மூலம் பல்வேறு பாதகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது, ஹெல்மெட்டை அணியும் போது, அது தலையில் அழுத்துவதால், மூளையில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைவது தெரியவந்துள்ளது.

இதனால் நாளடைவில் கழுத்து, பிடறி, முழங்கை, தோள்பட்டை, மூட்டு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்கள் இது பைக்கை தொடர்ந்து ஓட்டுவதால் ஏற்படுகிறது என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இது தவிர ஹெல்மெட் பக்கவாட்டுகள் காதுகளை அழுத்தும். அப்போது காதுகளின் கேட்கும் திறன் நரம்புகளில் வழக்கத்திற்கு மாறான அழுத்தங்கள் ஏற்பட்டு, பிற்காலத்தில் கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கோடைகாலங்களில் கடுமையான வெயிலில் ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்தநாளங்கள் மற்றும் தலையில் உள்ள சக்தி நரம்புகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஹெல்மட் அணியாத போதும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கவனத்தில் கொள்க

முதற்கட்டமாக அதிக எடை இல்லாத ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டும்.

இது தவிர அவரவர் தலைக்கு ஏற்றவாறான அளவில் ஹெல்மெட்களை வாங்கி பயன்படுத்துவது மிகச்சிறந்து.

வாகனம் ஓட்டும் நேரம் தவிர, சிக்னல் உள்ளிட்ட இடங்களில் நிற்க நேரிட்டால் அப்போது ஹெல்மெட்டை சிறிது நேரம் கழற்றி பின்னர் போட்டுக்கொள்ளலாம்.

இன்றைக்கு பல பைக் ஓட்டிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஹெல்மெட்டில் செல்போனை வைத்து பேசுவதுதான். ஹெல்மெட் அணிபவர்கள் கட்டாயம் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும்.

Sunday, September 7, 2014

ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்



நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா.

ஆம் நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுத்துவிடும்.

சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும், உடனே மருத்துவரை அணுகுவதுடன் இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை மற்றும் உணவுகளை உட்கொள்வது நலம்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது.

நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் `சயனோஸிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம்.

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும்.

சருமத்தைப் போல சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.

நகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.

* இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.

* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், சமையல் அறை, பசை மற்றும் இரசாயனங்களை உபயோகப்படுத்தும் போது கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

நகங்கள் ஏன் வளர்கிறது?

நகங்கள் தேவையில்லாமல் வளர்கிறது என்று நினைக்க வேண்டாம், இது ஒரு கழிவுப் பொருள் தான்.

கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது, நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.

அதேபோன்று நகத்தின் உட்புற பாகங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.

நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.

Friday, September 5, 2014

பட்டைய கிளப்பணும் பாண்டியா - திரை விமர்சனம்


அண்ணன் தம்பியான விதார்த்தும் சூரியும் பழனி-பாப்பம்பட்டி ரூட்டில் மினிபஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனராக வேலை பார்க்கிறார்கள். பஸ்ஸில் பயணிக்கும் நர்ஸ் மனிஷா யாதவ் மீது விதார்த்திற்கு காதல். ஆனால் அவரோ இவரை ஒதுக்குகிறார். தகப்பன் இல்லாத, தாயையும் பார்வை இல்லாத தனது அக்காவையும் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் மனிஷாவின் உண்மை நிலை அறிந்த விதார்த், மெல்ல பின்வாங்குகிறார்.. ஆனால் அதுவே விதார்த் மனிஷாவுக்கு காதலை வரவழைக்கிறது.

இந்த நேரத்தில் விதார்த்தின் முயற்சியின் பேரில் அவரின் பங்காளி ஒருவர், மனிஷாவின் அக்காவை திருமணம் செய்ய முன்வருகிறார்.. திருமணம் நாளை என்கிற நிலையில் முன் தினம் இரவு எதிர்பாராத சோதனையை விதார்த்தும் அவரது பங்காளியும் சந்திக்கிறார்கள்.. சிக்கலில் இருந்து மீண்டார்களா.. திருமணம் நடந்ததா என்பது க்ளைமாக்ஸ்..

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நாம் பார்த்து சலித்த சாதாரண கதைதான். ஆனால் விதார்த்தின் பக்குவப்பட்ட பாந்தமான நடிப்பும் சூரியின் நான்ஸ்டாப் காமெடியும் அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு படத்துடன் நம்மை பயணிக்க வைக்கின்றன. விதார்த அப்படியே விக்ரமன் பட ஹீரோவின் ஜெராக்ஸ் காபி.. ஆனால் அழகான காபி..

“சுடுதண்ணிய பிரிட்ஜுக்குள்ள வைக்கிற ஒரே ஆளு நீதான்” என தனது அம்மாவை கிண்டலடிப்பது, ஒயின்ஷாப்பில் “ஊறுகாய் எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு, நைசா சுண்டலை தூக்குறீங்களே பிரதர்” என கலாய்ப்பது என கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகனாக வலம் வரும் சூரியின் சலம்பல் படம் முழுவதையும் கலகலப்பாக நகர்த்துகிறது.

பஸ் முதலாளியாக வரும் இமான் அண்ணாச்சியும் கூட சேர்ந்துகொண்டு கும்மி அடித்திருக்கிறார். கதாநாயகி மனிஷா ஏனோ டல்லடிக்கிறார். முகத்திலும் நடிப்பிலும் விதார்த்தை கவர்ந்த அளவுக்கு நம்மை கவரவில்லை.

இளவரசு, கோவைசரளா ஜோடி ஓவர்டோஸ் தான் என்றாலும் ரசிக்கவைக்கும் எல்லைக்குள்ளேயே இருக்கிறார்கள். போலீச்ச்க இரண்டு காட்சிகளில் வந்தாலும் ஜெயபிரகாஷின் நடிப்பு கச்சிதம்.

அடிக்கடி பழனி முருகன் கோவிலை காண்பித்தபடி, அருகிலுள்ள ஊர்களுக்கு, நம்மை சுற்றிப்பார்க்க சின்னதாக ஒரு டூர் அழைத்துச் சென்றுவநதிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார்.. எந்தவித திருப்பங்கள் இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது பயணம்.




Source : www.tamil247.info

முதல் முறையாக காக்கிச் சட்டை அணியும் ஜீவா


நடிகர் ஜீவா முதல் முறையாக காக்கிச் சட்டை அணிந்திருக்கிறார், ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள யான் படத்துக்காக.

‘என்றென்றும் புன்னகை' படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் யான்.

இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜீவாவுக்கு ஜோடியாக துளசி நடித்துள்ளார். மற்றும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

ட்ரைலர்

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் 2 மாதங்களுக்கு முன்பே வெளியாகின. இந்நிலையில் நேற்று முன்தினம் ‘யான்' படத்தின் முழு நீள டிரைலர் வெளியானது.

போலீஸ்

படு விறுவிறுப்பான அந்த டிரைலரில் ஜீவா போலீஸ் யூனிபார்மில் வருகிறார். அதாவது ‘போலீஸ்' அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறார்.

முதல் முறை

இதற்கு முன்பு ஜீவா தன்னுடைய படங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. அப்படி பார்த்தால் அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில்

இதனால் ஜீவா ரசிகர்க செம குஷியாக இருக்கிறார்கள் (மன்றம் வைத்து அதை சரியாக நடத்தியும் வருபவர் ஜீவா). வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவிருக்கிறது.

Thursday, September 4, 2014

பல ஹீரோயின்கள் விபச்சார தொழிலுக்கு வந்துள்ளனர்: ஸ்வேதா பாசு


ஹைதராபாத்: தான் மட்டும் அல்ல பல ஹீரோயின்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அண்மையில் விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. அவர் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான மக்தீ இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றவர். வளர்ந்த பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
ரா ரா படம் மூலம் கோலிவுட் வந்தவர் கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 31ம் தேதி ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் ஸ்வேதா கையும், களவுமாக சிக்கினார். அவருடன் சில தொழில் அதிபர்களும் சிக்கினர்.
இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா கூறுகையில் 
நிதி நெருக்கடியால் தவித்த என்னை விபச்சாரம் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சிலர் ஆசை காட்டினர். வேறு வழி இல்லாமல் தான் இந்த தொழிலுக்கு வந்தேன். நான் மட்டுமா இப்படி விபச்சாரத்திற்கு வந்தேன். என்னை போன்று பல ஹீரோயின்களும் இந்த தொழிலுக்கு வந்துள்ளனர் என்றார்.
முன்னதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை புவனேஸ்வரியும் பல நடிகைகளின் பெயரை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 21, 2014

ரூ 50 லட்சம் செக் மோசடி இயக்குநர் சரண் கைது


சென்னை: ரூ 50 லட்சம் செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் சரண் இன்று கைது செய்யப்பட்டார். 

காதல் மன்னன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் சரண். தொடர்ந்து அமர்க்களம், அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், வட்டாரம் உள்பட பல்வேறு படங்களை இயக்கினார். 

தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடந்து வருகிறது. இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. 

படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார் சரண். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். உடனே படப்பிடிப்பை நிறுத்திய சரண், போலீசாரிடம் விளக்கம் கேட்டார். ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் சிவகாசி கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்துள்ளதையும், இந்த வழக்கில் ஆஜர்படுத்த கைது செய்வதாகவும் போலீசார் அவரிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சிவகாசி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Monday, August 18, 2014

விநாயகர் சதுர்த்தி தினத்தில் தல 55 பட தலைப்பு வெளியீடு


கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதுவரை இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. தல 55 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 75 சதகிவித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார்.

கவுதம் மேனன், அஜீத் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது. அது மட்டுமல்ல, அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் என்பதாலும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தல 55 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் விரைவில் துவங்கவிருக்கிறார்களாம்.

இன்னும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. எனவே விநாயக சதுர்த்தி அன்று (29-8-14) இப்படத்தின் தலைப்பை அறிவிக்க இருக்கிறார்கள். அன்றே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.