Monday, September 8, 2014

ஹெல்மெட் அணிவதும் உயிருக்கு ஆபத்தான ஒன்று


மனித உடலின் மொத்த உயிர்நாடியாக விளங்குவது மூளை மட்டுமே, இது பாதிப்படைந்தால் இறப்பு நிச்சயம் தான்.

இதற்காகவே வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் மூலம் பல்வேறு பாதகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது, ஹெல்மெட்டை அணியும் போது, அது தலையில் அழுத்துவதால், மூளையில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைவது தெரியவந்துள்ளது.

இதனால் நாளடைவில் கழுத்து, பிடறி, முழங்கை, தோள்பட்டை, மூட்டு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்கள் இது பைக்கை தொடர்ந்து ஓட்டுவதால் ஏற்படுகிறது என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இது தவிர ஹெல்மெட் பக்கவாட்டுகள் காதுகளை அழுத்தும். அப்போது காதுகளின் கேட்கும் திறன் நரம்புகளில் வழக்கத்திற்கு மாறான அழுத்தங்கள் ஏற்பட்டு, பிற்காலத்தில் கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கோடைகாலங்களில் கடுமையான வெயிலில் ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்தநாளங்கள் மற்றும் தலையில் உள்ள சக்தி நரம்புகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஹெல்மட் அணியாத போதும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கவனத்தில் கொள்க

முதற்கட்டமாக அதிக எடை இல்லாத ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டும்.

இது தவிர அவரவர் தலைக்கு ஏற்றவாறான அளவில் ஹெல்மெட்களை வாங்கி பயன்படுத்துவது மிகச்சிறந்து.

வாகனம் ஓட்டும் நேரம் தவிர, சிக்னல் உள்ளிட்ட இடங்களில் நிற்க நேரிட்டால் அப்போது ஹெல்மெட்டை சிறிது நேரம் கழற்றி பின்னர் போட்டுக்கொள்ளலாம்.

இன்றைக்கு பல பைக் ஓட்டிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஹெல்மெட்டில் செல்போனை வைத்து பேசுவதுதான். ஹெல்மெட் அணிபவர்கள் கட்டாயம் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும்.