Tuesday, January 22, 2013

நோக்கியாவின் அழகான குறைந்த விலை மொபைல்!

நோக்கியா நிறுவனம் தனது புதிய வெளியீடாக நோக்கியா 114 என்ற குறைந்த விலை டியூவல் சிம் மொபைலை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைலின் விலை வெறும் ரூ. 2,549 மட்டுமே.

இந்த மொபைல் குறிப்பாக இளைஞர்களைக் கவரும் வகையில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆப்ஸ்களை உள்ளடக்கியுள்ளது.

நோக்கியா 114 மொபைல் 85 சதவீதம் திறம்பட பிரவுசிங் செய்யும் வகையில் நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த போனில் நோக்கியாவின் தனித்துவமான அம்சமான ஈசி ஸ்வாப் தொழில்நுட்பம் உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பேட்டரியைக் கழட்டாமலும், போனை அணைக்காமலும் எளிதில் பயன்பாட்டை ஒரு சிம்மிலிருந்து மற்றொரு சிம்மிற்கு மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும் இந்த ஈசி ஸ்வாப் தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 5 சிம் கார்டுகளின் தரவுகளை சேமித்து துல்லியமாக பயனாளருக்குக் கொடுக்கும்.

1.8 இன்ச் QVGA திரை, 0.3 மெகாபிக்ஸல் ரியர் கேமரா, டியூவல் சிம் (GSM + GSM), 32GB வரை விரிவுபடுத்தக் கூடிய மெமரி, 1020 mAh பேட்டரி (இதன் மூலம் 637 மணி நேரம் ஸ்டான்ட்பையிலும், 10 மணி நேரம் தொடர்ந்து பேசவும் முடியும்), நீள அகல தடிமன் முறையே 10.0மிமீ X 46.0மிமீ X 14.8மிமீ, 80 கிராம் எடை, புளுடூத் 2.1, ரேடியோ, ஆல்பாநியூமரிக் கீபோர்டு, நோக்கியா ஸ்டீரியோ இயர் போன் WH-102 ஆகியன இந்த மொபைலின் சிறப்பு அம்சங்களாகும்.