Tuesday, March 5, 2013

அதிரடி விற்பனையில் சம்சுங்கின் Galaxy Note 8.0



அப்பிளின் தயாரிப்புக்களுக்கு போட்டியாக விளங்கும் சம்சுங் தயாரிப்புக்களின் வரிசையில் தற்போது Galaxy Note 8.0 டேப்லட்டும் இணைந்துள்ளது.

8 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel Resolution கொண்டு WXGA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தொடுதிரையினை உள்ளடக்கிய இந்த டேப்லட் ஆனது கூகுளின் பிந்திய பதிப்பான Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 1.9GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core A9 Processor பிரதான நினைவகமாக 2GB RAM, 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கென 1.3 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியனவும் காணப்படுவதுடன், சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொண்ட இரு பதிப்புக்கள் காணப்படுகின்றபோதிலும் microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

Source : http://yarlosai.com