Wednesday, May 15, 2013

Xolo Q700 – முழு விவரங்கள் மற்றும் விலை


Xolo ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தற்போது அதிகளவு விற்பனையாகி வருகின்றன. குறைந்த விலைக்கு அதிக வசதிகளை தரும் இந்த நிறுவனத்தின் புதிய மாடல் Xolo Q700 தற்போது ரூபாய் 9999 க்கு அறிமுகமாகியுள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.5 Inch IPS Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2400 mAh பேட்டரியுடன் 17 மணி நேர Talk Time மற்றும் 380 மணி நேர standby time கொண்டுள்ளது.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

அத்தோடு இந்த போன் XOLO Switch, XOLO Secure, XOLO Power போன்ற Application களுடன் வருகிறது. இவற்றின் மூலம் போன் பாதுகாப்பு, Remote Tracking, Battery Optimization, User Profile உருவாக்குதல் போன்ற வசதிகளை பெற முடியும்.