Friday, February 28, 2014

வல்லினம் திரை விமர்சனம்


கூடைபந்து விளையாட்டு வீரரான நகுல் ஒரு ஆட்டத்தின் இடையே தனது நன்பனான (இதய பலவீனமான) கிருஷனாவிடம் பந்தை கடத்த முயல அது அவரின் மார்பில் பட்டு அங்கேயே இறக்கிறார். இதனால் மிகவும் பாதிப்படைந்த நகுல் தன் நன்பன் இல்லாத அக்கல்லூரியில் தொடர விருப்பமில்லாமல் கல்லூரி இரண்டாம் ஆண்டை தொடர சென்னைக்கு பயணிக்கிறார். எந்த கூடைபந்து விளையாட்டால் தனது நன்பனை இழந்தாரோ அவ்விளையாட்டையும் தொடரக்கூடாதென முடிவெடுக்கிறார். சென்னை வந்து சேரும் அவருக்கு புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர். அவர்களும் கூடைபபந்தாட்டக்கார்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நண்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, கூடைபந்து பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது. தனது இறந்த நண்பனுக்காக கூடைபந்தை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்ப மேற்கொள்கிறார். இவர்கள் போட்டியில் எது வென்றது எனபதே வல்லினம்.

கதை, திரைக்கதையை சிறப்பாக இயக்குனர் அறிவழகன். நம் நாட்டில் கிரிக்கெட்டை தாண்டி எந்த விளையாட்டையும் பெரிதாக ஆத்ரிக்காததை சுட்டிக்காட்டியுள்ள இயக்குனர் அறிவழகனிக்கு ஒரு சபாஷ் போடலாம். படத்திற்க்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் பாஸ்கரனின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக காட்சிபடுத்தியிருக்கிறார். தமனின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிறக்கவில்லை. பின்னணி இசை கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.

நடிப்பில் நகுலுக்கு சொல்லிக்கொள்ளும் படமாக இப்படம் இருக்கும். இக்கதாபாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்தியுள்ளது.

கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிர்க்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிர்க்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது. நகுலுக்கு நனபர்களாக வரும் ஜகன், நரேன், சாய் ஆகியோர் அவர்கள் கதாபாத்திரத்தை உனர்ந்து நடித்துள்ளனர். வில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவகர்க்ளில்லாமல் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில் காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

ஓர் படமாக வல்லினத்தை பார்த்தால் உண்மை கருத்தை சொல்லும் படமே, ஆனால் ஈரம் பட இயக்குனரின் அடுத்த படைப்பாகப் பார்த்தால் தமிழ் சினிமா ரசிகருக்கு வல்லினம் – யானை பசிக்கு சோள பொறியே.

வல்லினம் – முயற்ச்சி திருவினையாக்கும்