Monday, July 28, 2014

முகத்துக்கேற்ற முடியலங்காரம்



முகத்துக்கேற்ற முடியலங்காரம்

கருமுகிலோ என வியக்க வைக்கும் ஆறடிக் கூந்தலை அனுபவித்து அலங்கரித்ததெல்லாம் அந்தக் காலம். இன்று முடியலங்காரக் கலை மூக்கின் மேல் விரலை வைக்குமளவுக்கு உயர்ந்துவிட்டது. நாகரிகம் வளர வளர ஆறடி ஈரடியாகி அதுவும் போய் காதுவரை என்றாகிவிட்டது. நாகரிகத்தின் வளர்ச்சி! வசதிக்கேற்ப, மாறிவரும் புதுப்புது உடைகளுக்கேற்ப முடியைத் திருத்தி அமைத்துக் கொள்வதில் பெண்கள் இன்று மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீண்ட கூந்தல் கொண்ட தலைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வேலைக்கு செல்லும் பெண்களால் தங்கள் நீண்ட கூந்தலை முறையாகப் பராமரிக்க முடிவதில்லையாம்! அதனால் தான் அவர்கள் முடியைக் கணிசமாகக் குறைத்து விடுகின்றனர்.

இவ்வாறு குறைக்கும்போது எந்த வகையான முடியலங்காரம் உங்கள் முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பெண்கள் அனைவருக்கும் முக அமைப்பு ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு நீள முகம், சிலருக்கு வட்ட முகம், சிலருக்கு ஓவல் ஷேப் என முக அமைப்பு இருக்கும். இதற்கேற்பதான் உங்கள் முடி அலங்காரமும் இருக்க வேண்டும். இல்லையேல் முகம் விகாரமாகிவிடும்.

முகத்துகேற்ப முடி அலங்காரங்கள்: 

ஸ்பேர்ட் ஸ்கட் :& நீளமான முகம், பெரிய கண்கள் கொண்ட பெண்களுக்கு இந்த வகை முடியலங்காரம் நன்றாக இருக்கும். இந்த அலங்காரம் உங்களின் நீண்ட முகத்தை வட்டமாகக் காட்ட உதவும்.

முதலில் முடியை நாலாபுறமும் சிறுசிறு லேயராக எடுத்து வெட்டவும். நெற்றி பகுதியுலும் சிறிய லேயாராக எடுத்து வெட்டவும். இதனால் பெரிய காதுகளாக இருந்தாலும் அவை மறைந்தது போலத் தெரியும். நெற்றியும் சிறியதாகத் தெரியும்.

இன்வெர்டட லேயர்டு கட் :

இந்த வகை முடியலங்காரம் சதுர வடிவ முகம் கொண்ட பெண்களுக்கு ஏற்றது. முதலில் கழுத்துப் பகுதியில் இருக்கும் முடியை சிறிதாக வெட்ட வேண்டும். கழுத்துப் பகுதியை மறைக்கு நீள முடிகளையும் கத்தரிக்கவும், இப்போது சதுரமுகம் வட்ட முகமாய்க் காட்சியளிக்கும்.

ஷார்ட் பாப் கட் :

வட்ட முகம் கொண்ட பெண்களுக்கு இவ்வகை முடியலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதில் தலையின் நடுவில் உள்ள முடிகளை மட்டும் விட்டுவிட்டு இருபுறமும் உள்ள முடிகளை வெட்ட வேண்டும். அதே போல நெற்றியின் மேல் உள்ள முடிகளையும் சீராக வெட்டிக் குறைக்கவும்.

ஸ்பைக் கட் :

இது எல்லோருக்கும் ஏற்றது. தலையின் நாலாபுறமும் சிறு சிறு லேயர்களாக முடியை எடுத்து வெட்டவும். பின்னர் தலையின் நடுவிலும் முன்புறமும் வெட்டவும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வகை ஹேர்கட் அழகாகவும் வசதியாகவும் இருக்கும். இந்த முடியலங்காரம் செய்து கொண்டவர்கள் முடியை சிறிது 'ப்ளீச்' செய்தால் இன்னும் அழகாகத் தெரியும்.

லேயர் ப்ளாண்ட் கட்:

இந்த வகை முடியலங்காரத்தில் பலவிதம் உண்டு. ஹேர் டிரையர் மூலம் பல ப்ளாண்ட் கட் செய்யலாம்.

நெற்றியில் முடிக் கற்றைகள் வந்து விழுமாறு அலங்காரம் செய்யப்படும். எல்லா வகை முகத்துக்கும் ஏற்றது இந்த முடியலங்காரம்.