Tuesday, August 12, 2014

தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர்

என்று மாறியுள்ளது.
_______________________________________________________________________________.

பொழில்

ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
_______________________________________________________________________________.
வென்கல்லூர் என்பதே பெங்களூர்

என்று திரிந்துள்ளது
_______________________________________________________________________________.

.செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.
_______________________________________________________________________________.

.எருமையூர் -மைசூர்,(எருமை என்பது வடமொழியில்

மகிசம்.எனவே மகிசூர் என்று மாற்றி பின்

அது மைசூர் என்றானது)
_______________________________________________________________________________.
.
ஒத்தை கால் மண்டபம்- உதகமண்டலம்

அதாவது ஊட்டி தானுங்க.
_______________________________________________________________________________.

ஒகேனக்கல்- உகுநீர்க்கல்,புகைநற்கல்.
_______________________________________________________________________________.
.
விருதாச்சலம்(வடமொழி)- முதுகுன்றம்(தமிழ்).
_______________________________________________________________________________.

.வேதாரண்யம்(வடமொழி) -திருமறைக்காடு(தமிழ்).
_______________________________________________________________________________.

தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும்

இதை அனைவரும் அறிந்ததே,

('தியாகராயர்'-இவர் நீதிக்கட்சி தலைவர்களில்

ஒருவர்)
_______________________________________________________________________________.

கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்".
_______________________________________________________________________________

பாண்டிபசார் -சவுந்தரபாண்டியனார் அங்காடி.

(அய்யா சவுந்தரபாண்டியனும்

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
_______________________________________________________________________________

மதுரை என்பது மதிரை

(மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள்

நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான்

மதுரை என்று பெயரிட்டனர்)
_______________________________________________________________________________
குமரிக்கண்டத்தில் உள்ள

தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான்

வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
_______________________________________________________________________________

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர்

புளியங்காடு என்பதாகும்
_______________________________________________________________________________

நீலகிரி- குன்னூர் என வழங்குவது குன்றூர்.
_______________________________________________________________________________

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த

நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. (ஆர்

என்பது ஆத்தி மரம்.)
_______________________________________________________________________________

.ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர்

உள்ளது.

(காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய

ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும்

சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்)
_______________________________________________________________________________
.
நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ்

பெயர்சூட்டினார்கள்....!

ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த

எல்லா மொழியிலும் பெயர் உள்ளது 