Tuesday, April 30, 2013

யாருடா மகேஷ் - திரை விமர்சனம்



அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படங்கள் வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவிலிருந்து விலகி ரசிகர்களை கவர்ந்தது
போல் யாருடா மகேஷும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்ற எண்ணத்தை யாருடா மகேஷின் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்தது. அது பூர்த்தியானதா என்பதுதான் கேள்வி.

படத்தை இயக்கியவர் வளர்கிற பருவத்தில் ஹார்லிக்ஸுக்குப் பதில் காமத்துப்பால் குடித்திருக்க வேண்டும். காட்சி, பேச்சு என்று எல்லா விஷயங்களிலும் அந்தப்பால்தான் விடைத்துக் கொண்டு நிற்கிறது. ஹீரோ மேட்டர் படம் பார்க்கிறார். அவர் எறிகிற பந்து நண்பனின் மேட்டரை பதம் பார்க்கிறது. காதலியிடமும் அதற்குத்தான் அலைகிறார். மகேஷைத்தேடி போகிற இடங்களிலும் - ஆணோ, பெண்ணோ - அதுக்குதான் ஹீரோவை கூப்பிடுகிறார்கள். அடிக்கிறவர்கள்கூட அங்குதான் அடிக்கிறார்கள். யாருடா மகேஷுக்கு பதில் பாருடா மேட்டர் என்று வைத்திருக்கலாம்.