Sunday, April 28, 2013

சோனியா, மன்மோகன் மோதல்



காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் செயல்பாடு மற்றும் நிலக்கரி சுரங்க
ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சரின் நடவடிக்கைகளில் சோனியா மிகுந்த அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


லோக்சபா தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இத்தகைய செயல்பாடுகள் கட்சிக்கு நல்லதல்ல என சோனியா நினைக்கிறார். மேலும், மன்மோகன் சிங்கின் தன்னிச்சையான செயல்பாடுகளால் தான் தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் சோனியா கருதுகிறார். இதே போல், சட்ட அமைச்சர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரும் விரும்புகின்றனர். ஆனால் அஸ்வினி குமார் மீது நடவடிக்கை எடுத்தால், மத்திய அரசு சி.பி.ஐ. நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை என்பது போலாகிவிடும் என்பதால், பிரதமர் நடவடிக்கைக்கு மறுத்து வருகிறார். இத்தகைய செயல்பாடுகளால் பிரதமர் மற்றும் சோனியா இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.