Sunday, April 28, 2013

கதாநாயகனாகும் யுவன் ஷங்கர் ராஜா


இயக்குனர், பாடலாசிரியர்களெல்லாம், ஹீரோவாக நடித்து, ஓய்ந்து விட்ட நிலையில், சமீபகாலமாக சில இசையமைப்பாளர்களுக்கு ஹீரோ ஆசை தலை தூக்கியுள்ளது."நான் என்ற படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும் ஹீரோவாக நடிக்க, சிலர் கதை கூறினர். ஆனால், அந்த கதையை, இப்போது இன்னொரு நடிகரை வைத்து, "மதயானைக் கூட்டம் என்ற பெயரில் படம் தயாரிக்கிறார், அவர். சில இசை வீடியோக்களில் நடித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா, தற்போது, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதற்காக நடனம் பயின்று வரும் அவர், உடற்பயிற்சி செய்து உடம்பையும் ஸ்லிம் செய்து வருகிறார்.