Tuesday, May 14, 2013

எம்.பி.யாக விரும்பும் நடிகை ரம்யா



நடிகை ரம்யா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக விரும்புகிறார். இவர் குத்து படம் மூலம் தமிழிலில் அறிமுகமானார். 

கிரி, பொல்லாதவன், தூண்டில், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா.

சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகிக்கிறார். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் மந்திரிகள் சிவகுமார், ரோஷன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டுராவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார். இவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் ரம்யாவின் மவுசு கூடியுள்ளது.

இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. சீட் கேட்க முடிவு செய்துள்ளார். அதற்கான தொகுதியை தேர்வு செய்து வருகிறார்.