Wednesday, June 12, 2013

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்கள் ரிலீஸ்


தனுஷ் நடிப்பில், பரத்பாலா இயக்கியுள்ள படம், ‘மரியான்’. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பார்வதி ஹீரோயின். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் 21,ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தனுஷ் இந்தியில் நடித்துள்ள படம், ‘ராஞ்னா’. அவர் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படம் தமிழில், ‘அம்பிகாவதி’ என்ற பெயரில் டப் ஆகிறது. இந்தப் படமும் வரும் 21,ம் தேதி இந்தி, தமிழில் ரிலீஸ் ஆகிறது. ஒரே நாளில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘அம்பிகாவதி டப்பிங் படம் என்பதால் ‘மரியான்’ ரிலீஸுக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லை’ என்று கூறப்படுகிறது,