Monday, June 10, 2013

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி


இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

வாரத்தின் முதல்நாளான இன்று வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பில் 48 காசுகள் சரிந்து ரூ.57.54 எனும் நிலையை தொட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.57.06 எனும் அளவில் முடிந்து இருந்தது.

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பிற நாடுகளுக்கும் அமெரிக்க டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி காணப்படடுவதாக அந்நிய செலவாணி தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.