Monday, May 13, 2013

Nokia Asha 501 புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி


கைப்பேசி உற்பத்தியில் முன்னணியில் திகழ்ந்த நோக்கிய நிறுவனமானது சம்சுங், அப்பிள் தயாரிப்புக்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளால் அண்மைக்காலமாக அதன் சந்தையில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முன்னணி இடத்தை கைப்பற்றும் விதமாக தொடர்ச்சியாக பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது Nokia Asha 501 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

3 அங்குல தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளது. மேலும் இதனை அதிகரிக்கும் பொருட்டு microSD கார்ட் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தவிர 3.2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, WiFi வயர்லெஸ் தொழில்நுட்பம் போன்றவற்றுடன் இரட்டை சிம் வசதியும் காணப்படுகின்றது.

ஸ்டான்பையில் 48 நாட்களுக்கு மின்னைச் சேமித்து வைத்திருக்கக்கூடிய மின்கலத்தைக் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையனாது 99 டொலர்கள் ஆகும்.